ஜோதா பாய் "இதயம் இடம் மாறியதே " Part 2

Monday, May 10, 2010
பகுதி 1


நகரும் பேருந்து
நேரம் : 8.50


ஏமாற்றத்தை மறுக்க முடியவில்லை , அவளுடன் இல்லாவிட்டாலும் அவளை போன்ற ஒருவருடன் தாய் மண்ணுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக எண்ணுவதற்குள் எல்லாமே முடிந்தது. " இவ இதுக்கு வராமலே இருக்கலாம் !! " என்று மனம் என்ன தோன்றியது .



ஆனா அவ வந்த அந்த நொடி வாழ்வில் மறக்கமுடியாத தருணமாகும் என கனவில் கூட நினைக்கவில்லை.

பேருந்து நகர்ந்துகொண்டு இருந்தது.....


ஜன்னல் வழியே concrete காடுகளை ரசித்த வண்ணம் பயணம் தொடர்ந்தது , சட்டென பேருந்தில் வானொலி ஒலிக்க ஆரம்பமானது.

இருந்த சோகத்தில் எரியும் நெருப்புக்கு என்னை ஊற்றும் விதமாக அமைந்த இளையராஜாவின் சோக பாடல்கள் கடுப்பை கிளப்பின.

"எனக்கு அப்பவே தெரியும் இவங்க இப்படி ஏதாவது பண்ணுவாங்க "
என மனம் சொல்லியது

அதற்குள் பேருந்து இன்னொரு இடத்தில் நின்றது .
சில பயணிகள் ஏறினர்

காலியாக இருந்த பக்கத்துக்கு seat இக்கு இப்பவாவது நல்ல figure வருமா என மனம் ஏங்குவதட்குள் ஒரு கிழவி வந்து உகார்ந்தது



no reaction only action (mind voice )

bag ஐ திறந்து கைஅடக்கதொலைபேசியை எடுத்து வானொலியை tune செய்து செவிபன்னி(earphone) ஐ காதுகளில் அணிந்து கொண்டு திரும்பி பக்கத்தில் இருந்த கிழவியை பார்க்க....

காதுகளுக்குள்

பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்.............


உண்மையை நினைச்சன் : தமன்னா !!!

பையா பாடல் ஒலிக்க என் சிரிப்பை என்னாலேயே அடக்கவில்லை...........

இது கண்ணாடி சரி செய்து பாக்க வேண்டாம் சைடு கண்ணாடி யை இழுத்திட்டு
அப்பிடியே குதிச்சு ஓடலாம் போல இருந்தது.

இருந்தும் தைரியத்தை வரவழைத்து விட்டு கைஅடக்கதொலைபேசி இல் சேமித்து வைத்திருந்த AR ரகுமான்னின் Mp3 கோப்புகளை திறந்து ஒலிக்க செய்துவிட்டு

ஜன்னல் வழியே வெளியே பார்க்க

இதயம் இடம் மாறியதே...
விழிகள் வழி மாறியதே..
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே.




பாடல் காதுக்குள் ரீங்காரம் இட பழைய நினைவுகள் மீள தொடங்கின


cut HERE


open THERE


இற்றைக்கு ரெண்டு வருடம் பின்னிருக்கும்


2 வருடங்களுக்கு முன்பு
கல்லூரியில் பப்பு......

வழமையான வாழ்வின் மறக்கமுடியாத கல்லூரி நாட்கள்



காலை வழமை போல பப்பு கல்லூரிக்கு புறபட்டான். வகுப்பு நேரத்தை விட வெள்ளனவாக சென்று விடும் எங்க குரூப்
அப்புறம் என்ன ஒரே அரட்டைதான்
park இல இருந்து எல்லா knowledge ஐயும் வளத்து கொண்டு இருப்பம்.

அப்புறம் வெக்க படாம ஒண்ணு சொல்லலாம் எங்க batch figure கள் முழுக்க அத்து
அதுவும் தமிழ் figure கள் அத்தோ அத்து . அப்படி luck இருந்தா சகோதர மொழி figure கள் ஒண்டு ரெண்டு டக்கரா வரும் அதுவும் one week இல்ல one month இல செட் ஆகி போகிடும் . இது தான் எங்க நிலைமை


இப்படியே இருந்த பாப்புவோட கல்லூரி வாழ்கையில
அவ வந்தா....


இடம் : கல்லூரி பார்க்
(குறிப்பான இடம் )zoom In : stone பெஞ்ச்


எல்லாருமே வழமை போல செட் ஆகி அரட்டை அடிச்சிட்டு இருந்தா

பார்த்தா பக்கத்தில கொஞ்ச புது முகங்கள் அங்கும் இங்கும் தனியாவும் கூட்டமாவும் கூட்டமாவும் திரியுதுகள்.
அப்போ
"டேய் மச்சான் என்ன ஒரே figure களா கிடக்கு "
"புது batch உம் வரல"

எண்டு சொல்ல


zoo zoo வேகமாக ஓடி வந்தான்.............
அவன் முகத்தில் ஒரு ஒளிவட்டம் ,என்ன ஒரு ஒரு தேஜஸ்

"மச்சான் ஸ்பெஷல் batch வந்திருக்காம்..."
"அது தான் எல்லாம் புதுசா இருக்கு "
என்று சொன்னான்

time ஐ பார்த்தா 8.50
மச்சான் class இக்கு time ஆவுது கிளம்புவம்
எண்டான்


class இக்கு போன அங்கயும் ஒரே புது புது முகங்கள்

மச்சான் இது எங்க கிளாஸ் தானே ??
தெரியலடா !!! #$@%##^ !!!

எல்லோருமே குழம்பி போனோம்

அதுக்குள்ள மேடம் வந்திட்டா

"good morning all !!!"
"sorry for LATE "

" these guys also joining with u for my class from today "
என்றதும் எங்களுக்கு படு குஷி

எல்லாமே சகோதரமொழி சரக்கல கிடக்கே ஏதாச்சும் தமிழ் சரக்கு தென்படுதா
என மின் காந்த பார்வையை எமதுகுழு செலுத்தியது

மொழி தெரியாத திரைபடத்தை sub title இல்லாம பார்த்த எப்படி இருக்குமூ அப்படி தான் எங்க lectures
போய் கொண்டிருந்தது ..

sup title இல்லாத படத்தை சைடா விட்டுட்டு எமது scanning தொடர்ந்தது


மச்சான் வைரஸ் found எண்டான்


பக்கத்தில் இருந்த zoo zoo

எங்கடா ???

அவள் தமிழ் இல்லடா
அவ டிரஸ் ஐ பாரு
நம்ம சரகுகள் இப்படி போடுமா???

என்றதும் அவன் குவாட்டர் அடிச்சா குரங்கு மாதிரி ஆப் ஆயிட்டான்

மச்சான் அங்க பாருடா 1 row செகண்ட் ஆ இருக்கிரவளை பாரு
ஆமாடா
சுடிதார் , இது நம் இனமெடா....

பீகாக் ப்ளூ கலர் சுடிதார் சாரி மாதிரி மினுன்கிற border
அப்புறம் டெனிம் but அவ முகம் தெரியல

bcos
அவ முன் பக்கம் lectures ஐ கவனிச்சிட்டு இருந்தா
நாங்க அவளை கவனிச்சிட்டு இருந்தம்

background ஐ பார்த்த நல்ல structure ஆய் இருக்கும்ம் எண்ட நம்பிக்கை


மச்சான் அதுசரி அவளோட பேரு ??
@^@%#^%^$&%&%^% ???????????

டாய் attendand sheet பாஸ் ஆகி வருது

அதில தமிழ் பெயரை பிடிச்சா சரி
so simple

attendant sheet is moving ..................................................


தொடரும்...............

0 comments:

Post a Comment